in

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் ஊர்வலம்

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் ஊர்வலம்

 

தேனியில் பாஜக சார்பில் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்ரேஷன் சிந்துார் என பெயரிட்டு, வெற்றி கண்டது,இந்த வெற்றியை கொண்டாடவும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தேனியில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம் நகராட்சி அலுவலகம் அருகே துவங்கி, நேருசிலை வழியாக பங்களாமேடு வரை நடந்தது.

இந்த ஊர்வலத்தில் பாஜக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்று தேசிய கொடியுடன் ஊர்வலத்தில் ஈடுபட்டனர் .மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார்.

நகர தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். பாஜகவின் முன்னாள் தலைவர் PC பாண்டியன், வணிகர் சங்கம் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வகுமார், பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஊர்வலத்தில் தீவிரவாதத்திற்கு எதிராகவும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோசங்களை எழுப்பி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

விரைவில் ரமணா 2…வை எடுப்போம்

டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் முழுமையாக படத்தில் இருந்து நீக்கம்