பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
தேசத்திற்கான மத்தியஸ்தம் என்ற பெயரில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி 2025 ஆம் வருடம் ஜூலை 1 முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள திருமண தகராறு வழக்குகள், விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வணிக தகராறு வழக்குகள், சேவை விவகார வழக்குகள், குற்றவியல் வழக்குகள் ( சமரசத்திற்கு உட்பட்டவை மட்டும் ), நுகர்வோர் பாதுகாப்பு வழக்குகள், கடன் மீட்பு வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் , நிலம் கையகப்படுத்துதல் வழக்குகள் , மற்றும் பிற பொருத்தமான சிவில் வழக்குகள் சமரசத் தீர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டு தீர்வு காண சிறப்பு திட்டம் நடைபெறுகிறது . விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி அவர்களின் வழி காட்டுதல் படி திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிபதி எண் 1 முகமது பாரூக் அவர்களின் மேற்பார்வையில் திண்டிவனம் சமரச மையத்தின் சார்பில் சரஸ்வதி சட்ட கல்லூரி மாணவ, மாணவியர் , மத்தியஸ்தர்கள் கிருபாகரன் , நாகையா , பாலசந்திரன் , பாலசுப்ரமணியன் , வழக்கறிஞர்கள் கார்த்திக் , ராகவி , சரஸ்வதி சட்ட கல்லூரி பேராசிரியர்கள் , சமரச சார்பு மைய பொறுப்பாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிறப்பு திட்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது . திண்டிவனம் இந்திரா காந்தி பேருந்து நிலையத்தில் இருந்து நேரூ வீதி , காந்தி சிலை வழியாக தீர்த்த குளக் கரை வரை சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் விழிப்புணர்வை வழக்காடிகளுக்கும் , பொதுமக்களுக்கும் ஏற்படுத்தினார்கள்.


