வைரலாகும் பிரபாஸ்..! ‘தி ராஜா சாப்’ 2.0 டிரெய்லர் சும்மா தெறிக்குது! இது ஒரு ஹாரர் + காமெடி மூவி
பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்புல உருவாயிருக்கற ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தோட 2-வது டிரெய்லர் இப்போ ரிலீஸ் ஆகி சோஷியல் மீடியாவை அதிர வச்சிட்டு இருக்கு!
இது ஒரு ‘ஹாரர்-காமெடி’ கலந்த படம். ஏற்கனவே வந்த டிரெய்லர் செம மாஸா இருந்த நிலையில், இப்போ “தி ராஜா சாப் 2.0” அப்படிங்கிற பேர்ல ரிலீஸாகியிருக்கற இந்த 2-வது டிரெய்லர் இன்னும் பயங்கரமா இருக்கு.
பிரபாஸோட அந்த ஸ்டைலும், கொஞ்சம் பயமுறுத்தி கொஞ்சம் சிரிக்க வைக்கிற அந்த மேனரிசமும் ரசிகர்களுக்குப் பிடிச்சிருக்கு. இயக்குநர் மாருதி இயக்கத்துல உருவாகியிருக்கற இந்தப் படத்துல மாளவிகா மோகனன், நிதி அகர்வால்னு மூணு ஹீரோயின்ஸ் நடிச்சிருக்காங்க.
அதுமட்டும் இல்லாம சஞ்சய் தத், போமன் இரானி மற்றும் நம்ம ஊரு சமுத்திரக்கனியும் முக்கிய ரோல்ல இருக்காங்க. தமன் மியூசிக்னாலே சத்தம் பயங்கரமா இருக்குமே…
இந்த ஹாரர் படத்துக்கு பிஜிஎம் (BGM) எப்படி இருக்கும்னு நீங்களே கெஸ் பண்ணிக்கோங்க!தமிழ்நாட்டில்: ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ். மற்ற மொழிகளில்: ஒரு நாளைக்கு முன்னாடியே, அதாவது ஜனவரி 9-ம் தேதி ரிலீஸாகுது.
தமிழில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுற அதே டைம்ல பிரபாஸோட இந்த ‘ராஜா சாப்’ வர்றதுனால, இந்த பொங்கல் பாக்ஸ் ஆபீஸ்ல செம போட்டி இருக்கும்னு தெரியுது!


