in

மோசடி வழக்கில் அதிரடியாக கைதி செய்யப்பட்ட ப்வோஎர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

மோசடி வழக்கில் அதிரடியாக கைதி செய்யப்பட்ட ப்வோஎர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW), நடிகர் மற்றும் மருத்துவருமான எஸ். ஸ்ரீனிவாசனை ₹5 கோடி கடன் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.

2018 முதல் விசாரணையைத் தவிர்த்து வந்த ஸ்ரீனிவாசன், இரண்டு முறை குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்ட போதிலும் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் தன்னை ஓர் Financier… ராக காட்டிக்கொண்டு, டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ₹1,000 கோடி கடனைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து ₹5 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை பின்னர் திரைப்படத் தயாரிப்பு மற்றும் சொந்த செலவிற்காக பயன்படுத்தி கொண்டார் “குற்றம் சாட்டப்பட்ட பவர் ஸ்டார் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார், இறுதியாக ஜூலை 27 அன்று சென்னையில் உள்ள வானகரத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்,”. இவர் ஏற்கனவே “விசாரணையின் போது முதலில் கைது செய்யப்பட்டார், பின்னர் 15 நாட்களில் ₹10 கோடியை நீதிமன்றத்தில் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்த பின்னர் 2013 இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், அவர் ₹3.5 லட்சத்தை மட்டுமே டெபாசிட் செய்துவிட்டு தலைமறைவானார்,”. ஏப்ரல் 2016 இல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் மார்ச் 2017 இல் மீண்டும் கைது செய்யப்பட்டு அதே ஆண்டு ஜூன் மாதம் ஜாமீன் வெளியே வந்தவர், மீண்டும் தலைமறைவானார், சென்னை வானகரத்தில் உள்ள கோல்டன் ட்ரெஷர் அபார்ட்மெண்டில் இருந்த அவரை போலீசார் கண்டு பிடித்து ஜூலை 27 அன்று கைது செய்தனர்.

What do you think?

சீனியர் நடிகைகளுக்கு மரியாதையே கொடுப்பதில்லை

திருமணம் செய்வதாக ஏமாற்றிய Rap singer வேடன் மீது போலீசில் புகார்