in

கார்த்திகை தீபம் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள்

கார்த்திகை தீபம் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள்

 

ஒரு விளக்கு இரண்டு ரூபாய் என யோசிக்காமல் இதற்கு பின்னால் எங்கள் உழைப்பு பற்றி நினைத்து வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கார்த்திகை தீபம் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

100 குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வந்த நிலையில் மற்றவர்கள் மாற்று தொழிக்கு சென்றதால் தற்போது 5 குடும்பங்களே செய்து வருகின்றனர்.
.
தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திரும்பிய திசை. கால் வைத்து நடக்க முடியாத அளவிற்கு அகல் விளக்குகள் தெருக்கள் முழுவதும் காய வைத்து இருப்பார்கள்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. அங்கொன்றும். இங்கொன்றுமாக அரிதாக ஒரு சிலர் அகல் விளக்கு தயாரித்து வருகின்றனர்.

பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம் என பேச துவங்கிய மண்பாண்ட தொழிலாளர்.

கார்த்திகை தீபத்திற்காக அகல்விளக்கு செய்து வருகிறோம்.

ஒரு ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அகல் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன

வழக்கமாக பித்தளையில் விளக்கு ஏற்றினாலும் கார்த்திகை தீபத்திற்கு மண் விளக்கேற்றுவார்கள்.

மண் விளக்குகளில் அழகு அழகா மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப நவீன முறையில் வர்ணம் பூசி விதவிதமான விளக்குகள் செய்து வருகிறோம்.

இந்த பகுதியில் 100 குடும்பங்கள் மண் பாண்ட தொழில் செய்து வந்தோம். எல்லோரும் தொழிலை விட்டு சென்றதால் தற்போது 5 குடும்பங்கள் செய்து வருகிறோம்.
.
பாரம்பரிய தொழில் அழிந்து விடக் கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு செய்து வருகிறோம்.

வருமானம் ரொம்ப குறைவா போய்விட்ட காரணத்தால் அனைவரும் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.

மண் கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. வைக்கோல் ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்கபட்டது இன்று 300 ரூபாய் விற்கப்படுகிறது.

1000 ரூபாய்க்கு விற்ற மட்டை 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறோம்.

மக்கள் விலை ஏற்றம்னு நினைக்காமல் அகல் விளக்கு வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும். எங்கள் வாழ்க்கை மக்கள் கையில் உள்ளது.

தமிழக அரசிடம் பலமுறை எங்கள் கோரிக்கையை கூறியும் இதுவரை எங்கள் கோரிக்கை ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார்

அடுத்த தலைமுறைக்கு மண் அகல்விளக்கு செய்ய ஆளே இருக்காது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் மண் பாண்ட தொழிலாளர்

What do you think?

ஆயிரம் திருக்கோவிலுக்கு உழவாரப்பணி தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பினர் திட்டம்

ரஜினிக்குப் பிடிக்கிற வரை கதை கேட்பேன்