in

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சத்தை 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர் இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டாரத்தில் சுமார் 39 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 70 நாள் பயிராக உள்ள தாளடி பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் வயல்கள் வெடித்தும் பயிர்கள் கருகி வருகிறது .

மேலும் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் பயிர்கள் கருகி வருவதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் எனவே வெள்ளை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டி நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 100க்கும் விவசாயிகளை திருக்குவளை கடைவீதி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது .

அதனைத் தொடர்ந்து பேரணியாக சென்று திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர் அங்கு வந்து அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன்படி போராட்டம் கைவிடப்பட்டது

What do you think?

‘விஜய்””நடிகையுடன் தொடர்பா? சங்கீதாவின் விவாகரத்து அதிரடிப் புகார்! ஆதாரங்களை வெளியிடுவேன்..

வசூலில் ‘தாய் கிழவி’ சரவெடி! அதிரடி காட்டும் ராதிகா! இந்த பாட்டி ‘சூப்பர் ஸ்டார்’ தான்!