அதிவேகமாக வந்த சொகுசு கார் சிசிடிவி காட்சி பதிவு போலீசார் விசாரணை
புவனகிரி பகுதியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து
சிசிடிவி காட்சியில் பதிவான விபத்து காட்சி குறித்து போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது சொகுசு கார் மோதி விபத்து டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதி விருதாச்சலம்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஓரமாக நிற்க வந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் சொகுசு கார் மோதி விபத்து ஆதிவராகநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் இரும்பு கடை ஒன்றில் லோடு ஏற்றுவதற்காக டாட்டா ஏஸ் வாகனம் வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டுநர் ஓரமாக நிறுத்த முற்பட்ட பொழுது உளுந்தூர்பேட்டையில் இருந்து புவனகிரி பகுதிக்கு மருத்துவம் பார்க்க வந்த சொகுசு இன்னோவா கார் டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது அதிவேகத்தில் மோதியது மோதியதில் டாட்டா ஏஸ் வாகனம் அருகில் உள்ள வயலில் தூக்கி வீசப்பட்டு அங்கு இருந்த எச்சரிக்கை பலகைகள் முறிந்து விழுந்தது விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தின் ஓட்டுனர் பிரபு என்பவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள கடை ஒன்றில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


