in

கரும்பு உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை மனு

கரும்பு உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை மனு

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் NPKRR கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாததால் விவசாயிகள் கரும்பு விற்பனை செய்ய 100 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சூழல் உள்ளதால் தனியார் கரும்பு ஆலைக்கு கரும்பு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் மயிலாடுதுறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வந்த NPKRR கூட்டுறவு சர்க்கரை ஆலை பல வருடங்களாக இயங்காமல் உள்ள நிலையில் கரும்பு விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் கரும்பினை 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேத்தியாத்தோப்பு MRK கூட்டுறவு ஆலைக்கும், 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கும் சில வருடங்களாக கரும்பு அனுப்பி வருகின்றனர்.

இதனால் பல்வேறு சிரமங்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர் குறிப்பாக அறுவடை செய்த கரும்பு நீண்ட தூரம் செல்வதால் அறுவடை செய்த கரும்பு இறக்குவதற்கு கால விரயம் ஏற்படுகிறது இதனால் கரும்பு காய்ந்து எடை குறைந்து போகிறது.

கொண்டு செல்லும் கரும்பில் வாகன இடையூறு மற்றும் வாகன விபத்து ஏற்பட்டால் ஆலையார் யாரும் வந்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கரும்புக்கு உரிய பண பட்டுவாடா செய்யப்படுவது குறித்த நேரத்தில் இல்லை இதனால் வங்கி கடனுக்கான வட்டி மற்றும் அசலை குறிப்பிட்ட காலத்தில் கட்டாததால் கூடுதல் மற்றும் அபராத வட்டியை தேவை இன்றி சுமக்கும் நிலை உள்ளது மேலும் உரிய கரும்பு கள அலுவலர்கள் இல்லாததால் பயிர் சாகுபடி மற்றும் பாதுகாப்பு பூச்சி நோய் மேலாண்மை விரயங்களால் சில நேரங்களில் பின்தங்கி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதற்கான அறிவுரை கூற களப் பணியாளர்கள் எவரும் இல்லை.

இது போன்ற பல்வேறு சிரமங்களை விவசாயிகள் சந்தித்து வருவதால் உடனடியாக சர்க்கரை மற்றும் கரும்பு துறை கொண்டு வந்த சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணை 1966 / வருவாய் (REVENUE RECOVERY ACT) சட்டப்படி கூட்டுறவு ஆலைக்கு மட்டுமே கரும்பு வழங்க வேண்டும் என்பதை நீக்கி தனியார் ஆலைக்கும் கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் மயிலாடுதுறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர் நல சங்கம் மற்றும் விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

What do you think?

எடப்பாடி பழனிச்சாமி விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடல்

மு கருணாநிதி அவர்களின் வெங்கல சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்