in

புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மனுக்கு முத்து பல்லக்கு பெருவிழா

புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மனுக்கு முத்து பல்லக்கு பெருவிழா

 

தஞ்சாவூரில் புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மனுக்கு முத்து பல்லக்கு பெருவிழா, 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் சுவாமி தரிசனம்.

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது, இக்கோவிலில் உள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது, அதனால் அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது, மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முத்துப் பல்லக்கு பெருவிழா, பால்குட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும், இதையடுத்து சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களால் 101 வது ஆண்டாக அருள்மிகு மாரியம்மனுக்கு பால்குட உற்சவம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.

 

மாரியம்மன் கோவில் சிவன் கோவிலிருந்து நாதஸ்வர, மேள தாளங்கள் முழங்க 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நான்கு ராஜவீதிகள் வழியாக நடந்து சென்று பின்னர் மாரியம்மன் கோயிலை சென்றடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பாபநாசம் அருகே மதகரம் ஸ்ரீ மகா காமாட்சியம்மன் ஆலய பால்குட திருவிழா

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுமன் பேட்டி