in

‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியா களமிறங்கும் ‘பராசக்தி’

‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியா களமிறங்கும் ‘பராசக்தி’

 

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியா களமிறங்கும் ‘பராசக்தி’ படத்தோட ஆடியோ லான்ச் பத்தி இப்போ ஒரு வெறித்தனமான நியூஸ் கசிஞ்சிருக்கு.

‘பராசக்தி’ படத்தோட இசை வெளியீட்டு விழா வர்ற ஜனவரி 3-ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்துல ரொம்பப் பிரம்மாண்டமா நடக்கப்போகுதாம்.

இந்த விழாவோட ஹைலைட்டே இதுதான்! ரொம்ப வருஷம் கழிச்சு ஒரே மேடையில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் ஒண்ணா வரப்போறாங்கன்னு பேச்சு அடிபடுது.

அவங்க கூடவே தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொள்ளப் போறாராம்.

சினிமா, அரசியல்னு ரெண்டு பக்கமும் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கு!

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்றதால, விளம்பரங்கள் எல்லாம் வேற லெவல்ல இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

படத்தோட சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி இப்போவே தட்டித் தூக்கிட்டாங்க.ஒரு பக்கம் விஜய் ‘ஜனநாயகன்’ படத்துக்காக மலேசியாவைக் குறிவைக்க, இங்க ‘பராசக்தி’ டீம் சென்னையைத் தங்களோட கோட்டையா மாத்திட்டாங்க.

ரஜினி, கமல் வர்றதால இந்த ஆடியோ லான்ச் இந்திய அளவுல பேசப்படும்னு கோலிவுட் வட்டாரம் சொல்லுது. ஜனவரி 3-ம் தேதி சோஷியல் மீடியா முழுக்க ‘பராசக்தி’ பேச்சாதான் இருக்கும் போலயே!

What do you think?

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை நடிகை நமீதா பேட்டி