in

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு

அச்சிறுபாக்கம் நகரில் உள்ள திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பட்ட அருள்மிகு இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

இத் திருக்கோயிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடுயொட்டி நந்தியம் பெருமானுக்கும் மற்றும் உற்சவ மூர்த்தியான சுவாமிக்கும் அம்மனுக்கும்
பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், தேன், கலசபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால்  அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து நந்தியம்பெருமானுக்கும் உற்சவமூர்த்தி களுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் உற்சவரான சுவாமியும் அம்மனும் எழுந்தருளி எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

தேர்தல் நேரத்தில் வீதியில் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 74 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்: கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி அதிக இடங்களில் போட்டியிட விருப்பதால் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.