பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணிக்கை
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணிக்கைகள் எண்ணபட்டதில் இரண்டு கோடியே 46 லட்ச ருபாய் ரொக்கமாக கிடைத்துள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கை பணியில் குறிப்பிடத்தக்க அளவில் காணிக்கை வரவு பதிவாகியுள்ளது.
இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், ரொக்கமாக ரூ.2 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 874 கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும்,
தங்கம் – 342 கிராம்,
வெள்ளி – 8,833 கிராம்,
வெளிநாட்டு நாணய நோட்டுகள் – 789 ஆகியவையும் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.21 லட்சத்து 25 ஆயிரத்து 798 கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் உண்டியலில் ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 500 காணிக்கையாக வந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ.15 ஆயிரத்து 078 கிடைத்துள்ளது.

இந்த உண்டியல் எண்ணிக்கை பணியில், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.
உண்டியல் எண்ணிக்கை பணிகள் அனைத்தும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் நடைபெற்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
