in

பாமகவை வழிநடத்தும் பக்குவமும், தலைமைப்பண்பும் மருத்துவர் ராமதாஸ_க்கு மட்டுமே உள்ளது

பாமகவை வழிநடத்தும் பக்குவமும், தலைமைப்பண்பும் மருத்துவர் ராமதாஸ_க்கு மட்டுமே உள்ளது

 

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மருத்துவ படுகொலை செய்யப்பட்டார் அதேபோன்று ராமதாஸுக்கும் அன்புமணி மற்றும் அவர் மனைவி மூலமே ஆபத்து உள்ளது மயிலாடுதுறையில் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனர் வி ஜி கே மணி பரபரப்பு பேட்டி.

ராமதாசுக்கு பிரச்சனை என்றால் அவர் உருவாக்கிய 100 காடுவெட்டி குரு உள்ளோம் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் எனவும் பேட்டி.

40 ஆண்டுகளாக கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்த்த தலைவர் ராமதாஸ் அவரே கட்சி அன்புமணி ராமதாஸ் அல்ல பகிரங்க பேட்டி.

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ_க்கும் இடையே மோதல்போக்கு அதிகரித்துள்ள நிலையில், வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்க நிறுவனருமான வி.ஜி.கே.மணிகண்டன் மயிலாடுதுறை அருகே வழுவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பாமகவை வழிநடத்தும் பக்குவமும், தலைமைப்பண்பும் அக்கட்சியை உருவாக்கிய மருத்துவர் ராமதாஸ_க்கு மட்டுமே உள்ளது.

குறுகிய காலத்தில் அன்புமணி ராமதாஸ் பாமகவை கைப்பற்ற முயல்கிறார். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அவர் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தடுத்து அவரை மருத்துவக்கொலை செய்தவர் அன்புமணி ராமதாஸ்.

இதனை மருத்துவர் ராமதாஸே விரைவில் ஒப்புக்கொள்வார். அன்புமணியின் பின்னால் செல்பவர்களுக்கே எதிர்காலத்தில் அரசியல் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால்தான் பலர் அவர் பின்னால் செல்கின்றனர்.

எனக்கு பாமகவை பிடிக்காது. இருந்தாலும் நான் மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறேன். ஏனென்றால் அன்புமணிக்கு உழைக்கத் தெரியாது. மருத்துவர் ராமதாஸின் உயிருக்கு அன்புமணி அல்லது அன்புமணியின் மனைவியால் ஆபத்து உள்ளது என்றார்.

What do you think?

50…தாவது நாள் விழா உருக்கத்துடன் கூறிய ஆதிக்

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம்