in

ஒரு தாயோட உணர்வுகளை மதிக்கணும், தெரியாம விமர்சிக்கக் கூடாது

ஒரு தாயோட உணர்வுகளை மதிக்கணும், தெரியாம விமர்சிக்கக் கூடாது

 

விஜய்யோட  ‘பிகில்’ படத்துல ‘பாண்டியம்மா’ கேரக்டர் மூலமா எல்லாரும் மனசுலயும் இடம் பிடிச்சவங்க தான் நம்ம இந்திரஜா ஷங்கர்.

காமெடி நடிகர் ரோபோ ஷங்கரோட மகளான இவங்க, இப்போ சோசியல் மீடியாவுல ஒரு பெரிய சர்ச்சையில சிக்கியிருக்காங்க. அதுவும் தங்களுக்கு குழந்தை பிறந்தது பத்தி!

இந்திரஜா ஷங்கருக்கும், டைரக்டர் கார்த்திக்கும் 2024-ல பிரம்மாண்டமா கல்யாணம் நடந்துச்சு. இப்போ அவங்களுக்கு “நட்சத்திரன்”னு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு. இந்திரஜா ஷங்கர் தன்னோட பிரசவ வீடியோ, குழந்தையோட போட்டோஸ் எல்லாத்தையும் இன்ஸ்டாகிராம்ல ஷேர் பண்ணி, செம ஹேப்பியா இருந்தாங்க.

ஆனா, சந்தோஷமா இருக்குற இந்த நேரத்துல நெட்டிசன்கள் சிலர் புதுசா ஒரு வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்க. “இந்திரஜா ஷங்கருக்கு குழந்தை பிறக்கல, அவங்க வாடகைத் தாய் (Surrogacy) மூலமா குழந்தை பெத்துக்கிட்டாங்க”, “இல்ல டெஸ்ட் ட்யூப் பேபி”னு ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சோசியல் மீடியாவுல வைரல் ஆச்சு.

இந்த விமர்சனங்களைப் பார்த்துட்டு அமைதியா இருக்க முடியாம, இந்திரஜா ஷங்கர் இப்போ ஒரு பேட்டியில உருக்கமா பேசியிருக்காங்க.

“என் கல்யாணத்துல இருந்து இப்ப வரைக்கும் எவ்ளோ விமர்சனங்களை நான் தாங்கிட்டு வர்றேன் தெரியுமா? ஆனா, என் குழந்தையைப் பத்தி இப்படி தப்பா பேசுறது ஒரு தாயா எனக்கு ரொம்ப வேதனை தருது”னு கண்ணீர் மல்க சொல்லியிருக்காங்க.

“ஒரு பொண்ணு கர்ப்பமா இருக்குறப்போ, அவ உடம்புலயும் மனசுலயும் எவ்ளோ மாற்றங்கள் நடக்கும்னு தெரியாம, உண்மை என்னன்னு விசாரிக்காம இப்படி பேசுறது தப்பு”னு நெட்டிசன்களுக்கு ‘நச்’னு பதில் கொடுத்திருக்காங்க.

இந்திரஜா ஷங்கரோட பேட்டியப் பார்த்துட்டு, அவங்க ரசிகர்கள் எல்லாரும் “பாண்டியம்மா.. நாங்க உன் பக்கம் இருக்கோம், கவலைப்படாதே!”னு கமெண்ட்ஸ் போட்டு ஆதரவு கொடுத்துட்டு வர்றாங்க.

ஒரு தாயோட உணர்வுகளை மதிக்கணும், தெரியாம விமர்சிக்கக் கூடாதுன்னு எல்லாரும் சோசியல் மீடியாவுல பேசிட்டு இருக்காங்க. எது எப்படியோ, சர்ச்சைகளைக் கடந்து இந்திரஜா ஷங்கர் தன்னோட குட்டி ஸ்டாரோட ஹாப்பியா இருக்குற போட்டோஸ் இப்போ செம வைரல்..

What do you think?

அண்ணாவுக்கு நேரமே சரியில்லை! விஜய் ரசிகர்கள் செம அப்செட்..

புதிய தயாரிப்பு நிறுவனத்தை பதிவு செஞ்சிருக்காரு தல அஜித் குமார்