மார்ட்டின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் அமைச்சர் ஜான் குமார் சார்பில் பொதுமக்களுக்கு தடபுடலான அசைவ விருந்து அளிக்கப்படும் பரிசுகள் வழங்கப்படும்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் மார்ட்டின் குழுமம் சார்பில் பல மாதங்களாக நாள்தோறும் பொதுமக்களுக்கு தலைவாழை இலை விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மார்ட்டின் குழுமத்தின் நிறுவனர் மார்ட்டின் பிறந்த நாள் விழா புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அமைச்சர் ஜான் குமார் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து வழக்கமான உணவுகளுடன் கூடுதலாக இறால் வறுவல், பிங்கர் ஃபிஷ் (Finger Fish), ஐஸ்கிரீம் மற்றும் ஜூஸ் வகைகள் வழங்கப்பட்டது மேலும் வருகை தந்த பொதுமக்களுக்கு ஒரு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. அந்த டிபன் பாக்ஸின் உள்ளே இனிப்பு (Sweet) வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் ஜான்குமார் பேசுகையில்,”இன்று எனது தெய்வத்தின் பிறந்தநாள். அதை கொண்டாடும் விதமாக இந்த உணவு வகைகள் மக்களுக்குச் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் அனைத்து மக்களும் வயிறார சாப்பிட்டுவிட்டு, எனது தெய்வத்தை இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று ஆசீர்வதிக்க வேண்டும். அதுவே எனக்குப் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார்,காமராஜர் நகர் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

