அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் உள்ளடக்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு விநியோகம்
புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் உள்ளடக்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு விநியோகம்…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் அடுத்த கருங்குழி, கொளக்குடி, மேட்டுக்குப்பம் பகுதிகளில் புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் உள்ளடக்கிய நோட்டீஸ்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யபட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களான திருமண உதவி திட்டம், கர்பிணி பெண்களுக்கு திருமண உதவி திட்டம், தாய்மார்களுக்கு மகபேரு கால நிதி உதவி, மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கில், பாடபுத்தகங்கள், மருத்துவ மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, உ ள்ளிட்ட திட்டங்களின் சாதனைகள் அடங்கிய நட்டீஸ்களை கிராம பொதுமக்களிடம் வீடுகள் தோறும் வழங்கினார்.
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.பி.எஸ். சிவசுப்பரமணியன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து கோவிந்தராஜ், வடலூர் நகர கழக செயலாளர் சி.எஸ்.பாபு,
மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


