தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை… கேஸ் சிலிண்டரும் இல்லை!” திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகில், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஏற்பாட்டில் பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படவில்லை, பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு (கேஸ்) சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது என குற்றம் சாட்டி, தமிழ்நாடு NDA கூட்டணியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்


