மேல்மருவத்தூரில் புதிய நியாய விலை கடை திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு விழா செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா தலைமையில் நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் அகத்தியன் அனைவரையும் வரவேற்றார்.
மேலும் இதில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அடைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள்.

மேலும் இதில் சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


