in

சினிமா கதாநாயகியுடன் சேர்ந்து ஏழுமலையானை வழிபட்டார் நேச்சுரல் ஸ்டார் நானி

சினிமா கதாநாயகியுடன் சேர்ந்து ஏழுமலையானை வழிபட்டார் நேச்சுரல் ஸ்டார் நானி

நேச்சுரல் ஸ்டார் என்ற புதிய பட்டத்தை ரசிகர்களிடமிருந்து பெற்றிருக்கும் திரைப்பட நடிகர் நானி இன்று அதிகாலை ஹிட் 3 திரைப்பட கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டியுடன் சேர்ந்து திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேதபண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர்களுடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய நானி, நான் நடிக்கும் படங்கள் திரைக்கு வருவதற்கு முன் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை வழிபடுவது வழக்கம்.

நான் கதா நாயகனாக நடித்துள்ள ஹிட்ஸ் 3 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இன்று கோவிலுக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டேன் என்று கூறினார்.

What do you think?

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் சித்திரை மாத கிருத்திகை அபிஷேகம்

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலய சித்திரை மாத கிருத்திகை