நாமக்கல் ராசிபுரம் ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பெரிய கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ இரட்டை விநாயகர் திருக்கோவிலில் மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக இரட்டை விநாயகருக்கு பால், தயிர் மஞ்சள், சந்தனம் தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.
ஸ்ரீ இரட்டை விநாயகரை பொதுமக்கள் தரிசனம் செய்து சென்றனர். இதனை
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


