நள்ளிரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வடலூர் விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மாடுகள் அனைத்தும் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை உண்பதற்காக சாலையில் சுற்றித் தெரிந்த வண்ணம் உள்ளது.
இதனால் இரவு நேரத்தில் தூக்க கலக்கத்தில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விளம்பர பேனர்கள் மற்றும் விளம்பர போஸ்டர் ஒட்டக்கூடாது அப்படி மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த நிலையில் வடலூர் நகராட்சி நிர்வாக சார்பில் போஸ்டர் மற்றும் பேனர்களை நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் ஒட்டினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் சென்டர்
மீடியன்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை உண்பதற்காக மாடுகள் நெடுஞ்சாலையின் நடுவே சுற்றித் திரிவது பொதுமக்கள்
மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது மாடுகளால் பெரும் விபத்து ஏற்படும் முன் வடலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.