செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானகொள்ளை விழா ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானகொள்ளை விழா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மறுநாள் மயானகொள்ளை விழா நடைபெறும்.நிகழாண்டு கணபதி ஹோமமும்,காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அபிஷேக ஆராதனையும்,சக்தி கரகமும்,அம்பாள்,வீரபத்திரா் வீதிஉலா காட்சியும் பேச்சியம்மன் புறப்பாடும் நடைபெற்றது.

தொடா்ந்து மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் அன்ன வாகனத்தில் அம்பாள் மற்றும் அகோர வீரபத்திரா் வீதியுலாவுக்கு எழுந்தருளினா்.
இதையடுத்து,மாலை 6 மணிக்கு மேல் கோயில் எதிரே உள்ள மயானம் முன் அம்மன் எழுந்தருளினாா்.அப்போது மயானத்தில் வாழை இலையில் வேக வைத்து கொட்டப்பட்ட தானியங்கள் மற்றும் கிழங்குகளை பக்தா்கள் அள்ளி செல்லும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.


