சாலையை சீரமைக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
பூம்புகார் சீர்காழி மெயின்ரோட்டை இணைக்கும் கூட்டுறவு நகர் பிரதான சாலையை சீரமைக்க கோரி நகரவாசிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளாலகரம்
ஊராட்சியில் கூட்டுறவு நகர் அமைந்துள்ளது. இவ்வழியாக பூம்புகார் சாலையில் இருந்து சீர்காழி மெயின்ரோட்டை இணைக்கும் கூட்டுறவுநகர் பிரதான சாலை சீரமைக்க வேண்டுமென கூட்டுறவு நகரவாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவுநகர் வலம்புரி நகரில் சுமார் 750க்கும் மேற்பட்ட குடும்பதத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பூம்புகார் மெயின்ரோட்டில் இருந்து சீர்காழி மெயின் ரோட்டை இணைக்கும் வகையில் வலம்புரிநகர், கூட்டுறவுநகர் பிரதான சாலை மிகவும் பழுதடைந்து ஆங்கங்கே பள்ளங்களுடன் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

சாலை சீரமைத்திட மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர், மயிலாடுதுறை எம்.எல்.ஏ., மயிலாடுதுறை எம்.பி, மற்றும் ஊராட்சி கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பியும் சாலை சீரமைக்க ஒரு நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படாத நிலையில் வருத்தமடைந்த குடியிருப்பு வாசிகள் சார்பாக அதன் நலச்சங்கத்தினர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு வழங்கினர்.
மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி அருகே மணக்குடியில் புதிய பஸ்ஸ்டாண்டு அமைப்பதற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நகரில் புறவழிச் சாலை இல்லாததால் சீர்காழி பகுதியில் இருந்து தருமபுரம், மன்னம்பந்தல் பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்பிக்க சீர்காழி சாலையில் இருந்து கூட்டுறவுநகர், வலம்புரிநகர் பிரதான சாலை வழியாக பூம்புகார் மெயின்ரோட்டை வந்தடைந்து தருமபுரம், மன்னம்பந்தல் பகுதிகளுக்கு வாகனங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்த பிரதான சாலை சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகிய நிலையில் இது குறித்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி வாகனங்கள் குழந்தைகளை அழைத்துசெல்ல வரமறுக்கின்றனர்.
மேலும் பள்ளி குழந்தைகளை அழைத்துகொண்டு வாகனங்களில் பெண்கள் செல்லும்போது தடுமாறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 27-ஆம் தேதி சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


