in

குடிநீர் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

சிதம்பரம் அருகே சி. மானம்பாடி கிராமத்தில்.சாலை மற்றும் குடிநீர் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட.
சி. மானம்பாடி ஐந்தாவது வார்டு பகுதியை சார்ந்த கிராம பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லாமலும் சாலை வசதி இல்லாமலும் ஒரு வருட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளனர்.

பலமுறை .மாவட்ட நிர்வாகத்திற்கும் பேரூராட்சி தலைவரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன்.கிள்ளை பரங்கிப்பேட்டை மெயின் ரோடு சி. மானம்பாடி கிராமத்தில் சாலையில் அமர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பெயிலியர் ஸ்டாலின் அரசை கண்டித்தும் கையில் பதாகை ஏந்தி கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் .ஈடுபட்ட இடத்திற்கு சிதம்பரம் தாசில்தார் கீதா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் .உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை .மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி.நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
சாலை மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் ஒரு வாரத்திற்குள் எங்களுக்கு குடிநீர் சாலை வசதி செய்து தரவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் பொதுமக்களை திரட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

What do you think?

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்

சீர்காழியில் புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த ஆறு பேர் கைது