in

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 539 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி:-எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்

 தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 539 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி:-எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்

தமிழக உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று முன்தினம் தொடக்கி வைத்தார்.

அரசு கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,427 மாணவ மாணவிகளுக்கு மடிக்கனிணி வழங்கும்.


திட்டத்தை மயிலாடுதுறை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் அமைச்சர் மெய்யநாதன் கடந்த திங்கள்கிழமை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்திருந்தார் .இதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன

இக்கல்லூரியில் பயிலும் 539 மாணவ மாணவிகளுக்கு மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில், கல்லூரி செயலாளர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன்,மகளிர் திட்ட உதவி இயக்குனர் சிவகுமார்,தேசிய மாணவர் படை கேப்டன் கார்த்திகேயன்,கல்லூரி குழு உறுப்பினர் சிவராமன்,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

Malina Casino – Online kaszinó értékelés

வடலூர் நகர திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது