மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவத்ல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏந்தி வழிபாடு.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம் உற்சவத்தில் பங்கு கொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் வருவது வழக்கம்.
ஆனி மாத அமாவாசை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு ஊஞ்சல் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.

உற்சவர் அங்காளம்மன் ராஜ்ய ப்ரதாயினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து பூசாரிகள் உற்சவர் அங்காளம்மனை தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் அமர வைத்து தாலாட்டு பாடல்கள் பாடப்பட்டன.
இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் எந்தி ஓம் சக்தி அங்காளம்மா என வழிபட்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலைத்துறை மற்றும் அறங்காவலர் குழு ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு முதலுதவி குழுவினர் தீயணைப்பு துறையினர் போன்ற விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


