பெயர் மாற்றம் செய்த மீனாட்சி சவுத்ரி
மீனாட்சி சவுத்ரி தமிழ் மற்றும் தெலுங்கு படங்கலால் பிரபலமான நடிகை …யாகி விட்டார்.
துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் மற்றும் தளபதி விஜய்யுடன் தி கோட் ஆகிய படங்களின் நடிப்பிற்குப் பிறகு, தென்னிந்திய இயக்குனர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார்.
நாக சைதன்யா மற்றும் நவீன் பாலிஷெட்டியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
பல நடிகர்கள் தங்கள் பெயர்களை அதிர்ஷ்டத்திற்காக அல்லது வெற்றிக்காக மாற்றுவார்கள். ரஜினிகாந்த் , கரீனா கபூர், நயன்தாரா போன்ற நட்சத்திரங்கள் வரை, இந்தப் போக்கு திரைப்பட உலகில் புதிதல்ல.
இப்போது, மீனாக்ஷி தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார் தனது பெயரில் கூடுதலாக “a” சேர்த்து இனி அவர் மீனாக்ஷி சவுத்ரி (MEENAAKSHI CHAUDHARY) என்று அழைக்கப்படுவார்.
ஜோதிடம் மற்றும் எண் கணித அடிப்படையில் மாற்றபட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, புதிய பெயர் அதிக நேர்மறை ஆற்றலையும், சிறந்த வாய்ப்புகளையும் வாழ்க்கையில் வெற்றியை கொடுக்க உதவும்….மாம்.