நாகூரில் மீலாது பெருவிழா
நாகூரில் நடைபெற்ற விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை: சிறுவர் முதல் பெரியவர் வரை நபிகள் நாயகத்தின் புகழை பாடி துவா செய்தனர்: பங்கேற்றவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம் அடுத்த நாகூரில் மீலாது பெருவிழா கமிட்டியின் சார்பில் 19 ஆம் ஆண்டு மீலாது நபி விழா இன்று ஏழு லெப்பை பள்ளிவாசலில் நடைபெற்றது.
பரீத் முஹம்மது ஒலிவாகிதி ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
சுகந்தமிகு சுபஹான மௌலூது எனும் நபிகள் நாயகத்தின் சிறப்புகளை எடுத்து கூறு நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மிலாது விழா சிறப்பு துவா எனும் இறைவேண்டல் நடைபெற்றது.

இதில் நாகூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இஸ்லாமிய சிறுவர்கள், பெரியவர்கள், முஹல்லாவாசிகள் பெண் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.


