in

மரக்காணத்தில் 25 கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி விழா

மரக்காணத்தில் 25 கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி விழா

 

மரக்காணத்தில் 25 கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி விழா நடைபெற்றது

மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் மாசி மாத மகம் நாளன்று சுவாமிகளுக்கு தீர்த்தவரி விழா நடைபெறுவது வழக்கம்.

இதுபோல் இந்த ஆண்டிற்கான மாசி மக தீர்த்தவாரி விழா நிகழ்ச்சி மரக்காணத்தில் நடைபெற்றது.

25 பகுதியிலிருந்து சர்வ அலங்காரத்துடன் சுவாமிகளை மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதுபோல் சர்வ அலங்காரத்துடன் அழைத்து வரப்பட்ட சுவாமிகள் மரக்காணம் தீர்த்த வரி கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து கடலில் இருந்து நீர் எடுத்து வந்து தீர்த்தவாரி விழா செய்தனர்.

இதுபோல் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகம் அன்று நடைபெறும் தீர்த்தவாரி விழாவில் கலந்துகொண்டு கடலில் புனித நீராடினால் பல்வேறு நன்மைகள் நடைபெறும் என்றும் இது போல் பிதுருக்கள் தோஷங்கள் நீங்க கூடும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் இந்த தீர்த்தவாரி விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

திண்டிவனம் வீடூர் கிராமம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய 3 ஆம் ஆண்டு மயான கொள்ளை விழா

கும்பகோணத்தில் மாசிமக பிரமோற்சவம் தேரோட்டம்