பி.ஏ வரலாற்று பாடத்திட்டத்தில் மம்மூட்டியின் சினிமா வாழ்க்கை சேர்க்கப்பட்டுள்ளது
அரசியலமைப்பு சபையில் இடம்பெற்றுள்ள ஒரே தலித் பெண்ணான தாக்ஷாயணி வேலாயுதனும், நடிகர் மம்முட்டியும் – இருவரும் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.
இவர்களை பற்றி பி.ஏ. வரலாற்று பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. மலையாள நட்சத்திரம் மம்மூட்டியின் சினிமா பங்களிப்பை இப்போது கொச்சி கல்லூரியில் ஒரு பாடமாகப் படிக்கலாம்.,
கேரளாவில் உள்ள மகாராஜா கல்லூரியில் மலையாள சினிமா வரலாறு தொகுதியின் கீழ் மம்மூட்டியின் வாழ்க்கையைப் படிக்கலாம்., மகாராஜா கல்லூரியில் பி.ஏ. வரலாறு பயிலும் மாணவர்கள், மம்முட்டியின் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை மற்றும் சினிமா மீதான தாக்கம் குறித்து ஆய்வு செய்வார்கள்.
“மலையாள சினிமாவின் வரலாறு” என்ற அத்தியாயம் அவரது வாழ்க்கையை விரிவாக ஆராய்கிறது. சுவாரஸ்யமாக, மம்முட்டியும் கல்லூரியின் முன்னாள் மாணவர்.
மோகன்லால், சத்யன், பிரேம் நசீர், மது, ஜெயன், ஷீலா, சாரதா, அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பத்மராஜன் ஆகியோரும் இந்த அத்தியாயத்தில் ஒரு பகுதியாக உள்ளனர்.. இந்த பாடத்திட்டம் 2025-26 கல்வியாண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.


