in

நல்லத்துக்குடி குயிலாண்ட நாயகி அம்மை ஆலந்துறையப்பர் ஆலய மகா கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடி குயிலாண்ட நாயகி அம்மை ஆலந்துறையப்பர் ஆலய மகா கும்பாபிஷேகம்

 

நல்லத்துக்குடி குயிலாண்ட நாயகி அம்மை உடனுறை ஆலந்துறையப்பர் ஆலய மகா கும்பாபிஷேகம் திருவாவடுதுறை ஆதின கட்டளை தம்பிராயன் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நல்லத்துக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான குயிலாண்ட நாயகி அம்மை உடனுறை ஆலந்துறையப்பர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

கடந்த வைகாசி 19 தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை உடன் பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிராயன் சுவாமிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

What do you think?

மணிரத்னத்தின் ThugLife தீப்பொறியா? சறுகளா? ThugLife Movie Review

செஞ்சி அருகே செம்பாத்தம்மன் – பச்சையம்மன் தேர் திருவிழா