மதுரா விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
பெரியதச்சூர் மதுரா விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பெரியதச்சூர் மதுரா விநாயகபுரம் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் உள்ளிட்ட கிராம தெய்வ ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை மங்கள இசை உடன் ஆரம்பிக்கப்பட்டு நான்காம் கால யாக பூஜையில் விசேஷ திரவிய பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் பழங்கள் செலுத்தப்பட்டன.
தொடர்ந்து மகா பூர்ணாஹுதி செலுத்தி கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. மேலும் காலை 9:30 மணி அளவில் யாத்ராதானம் என்னும் கலசங்கள் புறப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கருவறை விமான கோபுரத்தை வந்து அடைந்தது.
தொடர்ந்து கருவறை விமானம் மற்றும் எதிர் விமானம் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் என்னும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு ரம்யமாக காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விநாயகபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் வெகு சிறப்பாக செய்து இருந்தனர்.


