in

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா பூத மற்றும் அன்ன வாகனம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா பூத மற்றும் அன்ன வாகனம்

 

சித்திரை பெருவிழா இரண்டாம் நாளில் பூத மற்றும் அன்ன வாகனத்தில் மாசி வீதிகளில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மன்

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து முதல் நாள் நிகழ்வாக நேற்று மாலை மீனாட்சி அம்மனும், சுவாமியும் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று மாலை மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மன் பூத வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

சுவாமியும் அம்மனும் வீதி விழா வந்தபோது மாசி வீதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தனர்.

சுவாமி அம்மன் வீதி உலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடம் அணிந்தும் சிறுவர்கள் முருகன், விநாயகர், சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசை முழங்க ஊர்வலமாக சென்றனர்.

What do you think?

காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

வீடூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா