வெப் சீரிஸ்சில் Comeback கொடுக்கும் மாதவன்
மாதவன் நடிப்புல உருவான ‘லெகஸி’ வெப் சீரிஸ் டீசரை நெட்பிளிக்ஸ் இப்போ வெளியிட்டு இருக்காங்க.
டீசரைப் பார்த்தாலே இது ஒரு பக்கா அரசியல் த்ரில்லர் கதையா இருக்கும்னு தெரியுது. நம்ம மேடி (மாதவன்). இவரு கூட நிமிஷா சஜயன் (சித்தா பட நாயகி) மற்றும் அபிஷேக் பானர்ஜி முக்கிய ரோல்ல நடிச்சிருக்காங்க.
தெலுங்குல ‘அம்மு’ அப்படின்ற படத்தை எடுத்துப் பாராட்டுகளைப் பெற்ற சாருகேஷ் சேகர் தான் இதையும் இயக்கியிருக்காரு.
நெட்பிளிக்ஸ் அவங்க யூடியூப் பக்கத்துல, “சாம்ராஜ்யம், சிம்மாசனம் எல்லாம் இருக்கு. ஆனா அந்த கிரீடத்தை அணியுற தகுதி யாருக்கு இருக்கு?” அப்படின்னு ஒரு மிரட்டலான கேப்ஷனோட இந்த டீசரை விட்டுருக்காங்க.
அதிகாரத்துக்கான போராட்டத்தை மாதவன் எப்படிச் சமாளிக்கிறாருங்கிறது தான் கதையா இருக்கும்னு தோணுது.
இது ஒரு நேரடி ஓடிடி ரிலீஸ்.
ரிலீஸ் தேதியை இன்னும் சொல்லலனாலும், இந்தியால இருக்குற முக்கியமான 5 மொழிகள்ல இது ரிலீஸ் ஆகப்போகுது.
மாதவனை ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பவர்ஃபுல் பொலிட்டிக்கல் கேரக்டர்ல பார்க்க ரசிகர்கள் செம ஆர்வமா இருக்காங்க.
“விக்ரம் வேதா” மாதிரி மாதவன் இதுலயும் ஒரு அதிரடி காட்டப் போறாருன்னு தோணுதுல?

