காதல் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தையே கொடுத்தது.. நித்யா மேனன்
தனது வரவிருக்கும் படமான தலைவன் தலைவியை விளம்பரப்படுத்தி வரும் நடிகை நித்யா மேனன், பல ஆண்டுகளாக திருமணம் குறித்த தனது புரிதல் எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் பற்றிப் பேசியுள்ளார்.
தி ரம்யா ஷோவில் பேசிய மேனன், “நான் இளமையாக இருந்தபோது, ஒரு ஆத்ம துணையைக் கண்டுபிடிப்பது எனக்கு மிகவும் முக்கியமாக பட்டது,” “ஆனால் இப்போது, அது அவசியமில்லை என்பதை உணர்ந்தேன்.
குடும்பமும் சமூகமும் திருமணம் தவிர்க்க முடியாதது என்று உணர வைக்கிறது, ஆனால் அது அப்படியல்ல.
”திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தனக்கு எந்த வருத்தத்தையும் ஏற்படுத்தாது. “ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாமல் நிறைவான வாழ்க்கையை நடத்தினர்., உறவுகள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. “ஒவ்வொரு முறையும், நான் மனம் உடைந்து போனேன்,”. “அதனால் நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை.
இந்த அனுபவங்கள் ஒரு தெளிவை தந்தது. “காதல் அல்லது திருமணம் ஒரு குறிப்பிட்ட வழியில் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை நான் விட்டுவிட்டேன்.
வாழ்க்கையை வித்தியாசமாக வாழ வேண்டும் என்று கூறினார். பாண்டிராஜ் இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த தலைவன் தலைவி படத்தில் நித்யா மேனன் விஜய் சேதுபதியுடன் நடித்திருகிறார்.
இவர்களுடன் யோகி பாபு, சரவணன் மற்றும் செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். தலைவன் தலைவி ஜூலை 25 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.


