LeoScam … Leo உண்மையில் இவ்வளவு தான் வசூல் செய்ததா
2023 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன் நடித்த Leo திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் 600 கோடி..க்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடபட்டது.
விஜய்யின் படங்களில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் படமாக லியோ கொண்டாடப்பட்டது..
ஆனால் லியோ படத்தின் உண்மையான வசூல் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. .
கூலி திரைப்படம் வெளியாகி லியோ வசூலை முறியடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் உசுபேத்த, தயாரிப்பு நிறுவனம் வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்பட்ட லியோவின் உண்மையான வசூல் நகல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
நிதிநிலை அறிக்கை யின் படி ₹404 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது…
200 கோடி அதிகம் ஈட்டியதாக பொய் தகவல் பரப்பியதாக இணைய வாசி ஒருவர் #LeoScam.” என்று நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு குட்டை உடைத்து விட்டார்.
உண்மையில் இதுவரை உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.


