in

திமுக ஆட்சியில் நாள்தோறும் சீர்கெட்டு வரும் சட்டம் ஒழுங்கு

திமுக ஆட்சியில் நாள்தோறும் சீர்கெட்டு வரும் சட்டம் ஒழுங்கு

 

ஹரிஹரன் செய்தியாளர் சங்கரன்கோவில் விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் சீர்கெட்டு வரும் சட்டம் ஒழுங்கை நிரூபிக்கும் வகையில் போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே மது போதை ஆசாமி அரை மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்ட போதும் ஒரு காவல்துறையினர் கூட தடுத்து நிறுத்த வராத சம்பவம் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் இயங்கும் சட்டம் ஒழுங்கு கண்காணிக்க கூடிய உளவுத்துறை என்ற பிரிவு இயங்குகிறதா என்ற சந்தேகம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

சங்கரன்கோவிலில் மது போதையின் உச்சத்தில் மது போதை ஆசாமி வாகன போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி அல்ட்ரா சிட்டியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது -சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே மது போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டும் ஒரு காவல்துறையினர் கூட வராதது காவல் துறையில் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் இயங்கும் உளவுத்துறை என்ற பிரிவு இயங்குகிறதா என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் எழும்பி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் முன்னாள் திமுக எம்பி தங்கவேலுவின் வீட்டு அருகே மது போதை ஆசாமி ஒருவர் வாகனங்களை நிறுத்தி அல்ட்ரா சிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக இயங்கக்கூடிய நகரின் முக்கிய சாலையான இந்த சாலையில் மது போதை ஆசாமி ஒருவர் சாலையின் நடுவே நின்றபடியும் அமர்ந்தபடியும் படுத்தபடியும் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி ரகளை ஈடுபட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து அவ்வழியாக வந்த மினி பேருந்து மற்றும் கனரக வாகனங்களை மறித்து நீண்ட நேரமாக அல்ட்ரா சிட்டியில் ஈடுபட்டுள்ளார் மது போதையில் இருந்த இளைஞர் தன்னுடைய கைலியை முகம் சுளிக்கும் வகையில் இடுப்பிற்கு மேலே கட்டியவாறு சாலையின் நடுவே நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினி பேருந்தை மறித்து பேருந்து செல்ல விடாமல் சாலையின் நடுவே நின்றுள்ளார் இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் மது போதை ஆசாமியை வாகனத்தைக் கொண்டு இடித்து தள்ளிவிட்டு முன்னேற முயல்வது போல் வண்டியை இயக்கியுள்ளார்.

அதனை சற்றும் பொருட்படுத்தாத மது போதை ஆசாமி தன்னை ஒரு ஆஞ்சநேயர் போல் நினைத்துக் கொண்டு தன்னுடைய நெஞ்சுப் பகுதியால் வாகனத்தை தடுத்து நிறுத்த முயல்வதும் ஓட்டுநர் வாகனத்தை முன்னே கொண்டு செல்வதும் என சிறிது நேரம் வேடிக்கை சம்பவம் நடந்துள்ளது மது போதை ஆசாமியின் செயலை கண்ட அப்பகுதி மக்கள் முகம் சுளிக்க துவங்கினர்.

இந்த நிலையில் அவ்வழியாக வந்த கரைக வாகனம் ஒன்றை வழிமறித்த மது போதை ஆசாமி அந்த வாகனத்தை சாலையில் செல்ல விடாமல் நடுவழியில் நின்று அலப்பறையில் ஈடுபட்ட துடன் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய துவங்கினார் இதனைக் கண்ட ஓட்டுனர் நமக்கேன்வம்பு என நினைத்து கனரக வாகனத்தை சாலையின் மறு மார்க்கமாக கொண்டு செல்ல முயன்றார் இதனைக் கண்ட மது போதை ஆசாமி உடனடியாக சாலையின் மறுபார்க்கத்தில் சாலையின் நடுவில் சென்று அமர்ந்ததுடன் கனரா வாகனம் செல்ல விடாமல் சாலையில் படுத்தே விட்டார்.

இதனால் கனரக வாகன ஓட்டி அச்சமடைந்தார் ஆனால் அதே சமயம் அவ்வழியாக சென்ற வேறு எந்த வாகனத்தையும் தடுத்து நிறுத்தாமல் தன்னுடைய ஒரே குறிக்கோளாக கனரக வாகனத்தை மட்டும் தடுத்து நிறுத்துவதில் மது போதை ஆசாமி குறியாக இருந்தார்.

இதனை அடுத்து கனரக வாகன ஓட்டி வாகனத்தை பின்னே எடுத்துச் சென்று ஒரு வழிப்பாதை என்றும் பார்க்காமல் அவ்வழியாக வாகனத்தை ஓட்டிச் சென்றார் இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய மாணவ மாணவிகள் மது போதையின் அல்ட்ராசிட்டியை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

தற்போது மது போதை ஆசாமி அல்ட்ரா சிட்டியில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விடியா திமுக ஆட்சியில் மக்கள் போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே மது போதை ஆசாமி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்ட போதும் சம்பவ இடத்திற்கு ஒரு காவல்துறையினர் கூட வராததது காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் இயங்கும் உளவுத்துறை என்ற ஒரு பிரிவு காவல்துறையில் உள்ளதா என்ற சந்தேகம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

What do you think?

மஹாவாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா.

5 வருடப் போராட்டங்களுக்கு பிறகு இலவச வீட்டு மனை பட்டா, இனிப்பு வழங்கிக் கொண்டாடிய திருநங்கைகள்.