ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மட ஆலயத்தில் லலிதா மஹா ஹோமம்
நாமக்கல் பரமத்தி வேலூர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மட ஆலயத்தில் லலிதா மஹா ஹோமம் விஜயதசமியினை முன்னிட்டு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி விழா நிறைவு நாளினை முன்னிட்டு காலை லலிதா மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக கலசம் ஸ்தாபிக்கப்பட்டு 14 பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு லலிதா மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது. யாக வேள்விகள் முடிந்ததும் மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு முன்பு உள்ள மகாமேருக்கு பலவகை வாசனை திரவியங்களினால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு நிறைவாக கலச அபிஷேகம் செய்து மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நாமாவளிகள் கூறி உதிரிப்பூ அர்ச்சனை செய்து அடுக்காரத்தி, கும்ப ஆரத்தி, ஏகாரத்தி, பஞ்சாரத்தி உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடை, சாமரம், விசிறி, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களினால் உபச்சாரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சுமங்கலி பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.


