in

Kingdom Movie Review

Kingdom …is a  Perfect Master Piece …Kingdom திரைவிமர்சனம்

Watch – YouTube Click

விஜய் தேவரகொண்டா மற்றும் சத்யா தேவ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள தெலுங்கு படம் கிங்டம்.

கௌதம் தின்னனுரி இயக்கதில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பார்போம்.

Emotional Constable….லான சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் காணாமல் போன தனது சகோதரர் சிவாவை (சத்ய தேவ்) தேடிச் செல்கிறார்.

உயர் அதிகாரியை அடித்ததால் Punishment..டாக கடுமையான ஆபரேஷன்….னை தலைமை தாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் சூரி, சிவா இலங்கையில் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், ஒரு குழுவை வழி நடத்துகிறார் என்பதை அறிகிறார்.

பின்னர் சூரி தனது சகோதரனைக் கண்காணிக்கவும், கும்பலின் நடவடிக்கைகளை வெளிக்கொணரவும் ஒரு ரகசிய முகவராக நியமிக்கப்படுகிறார். அவர் கும்பலுக்குள் ஊடுருவியவுடன், சூரி அவர்களில் ஒருவராக மாறுகிறார்.

சிவா தனது சகோதரர் உண்மையில் யார் என்பதை உணர்ந்தாரா, சூரியின் நோக்கம் என்ன, இருவரும் கைகோர்ப்பார்களா அல்லது ஒருவருக்கொருவர் எதிராக நிற்பார்களா என்பதைச் சுற்றி கதை நகர்கிறது.

Emotional அதிரடி நாயகன் விஜய் தேவரகொண்டா துடிப்பான நடிப்பை கொடுத்திருகிறார். கடமைக்கும் தனிப்பட்ட உணர்ச்சிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு மனிதனின் சங்கடத்தை அழகாக பிரதிபலிக்கிறார். சத்ய தேவ் தனது பாத்திரத்தில் கட்சிதமாக பொருந்துகிறார் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து சில காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆனால் இருவரிடமும் Emotional Connectivity…. சுத்தமா இல்லை.

வில்லனாக வரும் வெங்கடேஷ் (முருகனாகத்), அருமையாக நடிக்கிறார், இருப்பினும், அவரது கதாபாத்திரத்தை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. பாக்யஸ்ரீ போர்ஸ் ஒரு Informer..ராக நடித்திருக்கிறார்.

அழகாக இருக்கிறார் நடிக்க வாய்ப்பு கொடுக்க வில்லை. மணீஷ் சவுத்ரி, Ayyappa P. Sharma, ராஜ்குமார் காசிரெட்டி அவர்கள் Character..ருக்கு பங்கம் செய்யாமல் நடித்திருகின்றனர்.

இளம் வயது சூரி மற்றும் சிவா வேடங்களில் ரோனித் கம்ரா மற்றும் கோத்தலா பானு பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளனர்.

அனிருத்தின் பின்னணி இசை சிறப்பு….மிக சிறப்பு . விறுவிறுப்பான முதல் பாகத்திற்கு நடிப்பைகாட்டிலும் இசை பக்க பலமாக இருந்தது இடைவேளைக்கு பிறகு படம் தொய்வை ஏற்படுத்தினாலும் அனிருத்தின் இசையால் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்.

பின்னணி இசை மட்டுமல்ல, அநியின் இசையுடன் பாடல்களும் அருமை குறிப்பாக ‘ரஜில் ரஜில்’ பாடல் இசை உச்சக்கட்டம். படத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அருமையாக இசையமைத்திருப்பது திரையில் நன்றாகத் தெரிகிறது, படத்தின் ஓட்டத்தைத் தொந்தரவு செய்யவில்லை.

அனிருத்…கு படம் முழுதும் ஒளிப்பதிவு …வின் முலம் செம்ம Tough கொடுத்திருகிறார்கள் கிரிஷ் கங்காதரன் மற்றும் ஜோமோன் டி. ஜான். ஒளிப்பதிவு காட்சிகளை பிரமிக்க வைக்கிறது.

முதல் பாதியிலும் படத்தின் கடைசி இருபது நிமிடங்களிலும் நவீன் நூலியின் படத்தொகுப்பு நன்றாக உள்ளது. இசை மற்றும் ஒளிப்பதிவால ஸ்கோர் பண்ணிட்டாங்க .சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் படத்திற்கு பிரமாண்டமான தோற்றத்தைக் கொடுக்க பணத்தைச் வாரி இறைத்திருகின்றனர், .

செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் திரையில் தெளிவாகத் தெரிந்தது. எழுத்தாளர் மற்றும் இயக்குனர் கௌதம் தின்னனுரியின் முதல் இரண்டு படங்களான மல்லி ராவா மற்றும் ஜெர்சி, அவரை ஒரு இயக்குநராக நிலைநிறுத்தி, ரசிகர்களின் உணர்ச்சிகளை தொட்ட தருணங்கள் அவை…ரசிகர்கள் அதே Mode…டில் Kingdom பார்க்க சென்றால் ஏமாற்றமே.

படத்தில் லாஜிக், மிஸ்ஸிங், அண்ணன் தம்பிகளிடையே Emotions சுத்தமா இல்ல சத்தம் மட்டும்தான் இருக்கு. Second…Half வழக்கம் போல் சொதப்பல். நகைச்சுவை முதல்பாதியில் நன்றாக வேலை செய்தது Second Half சீரியஸ்….. அனிருத் போட்ட Effort கூட இயக்குனர் போடவில்லை Kingdom..title..லுக்கு ஏற்ப நடிகர்கள் நடித்திருகிரார்கள் இயக்குனர் தான் சொதப்பிட்டார்.

படத்துல மைனஸ் ஒருந்தாலும், இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

What do you think?

சீமாத்தம்மன் ஆலயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு

நான் அதிக நாள் இருக்க மாட்டேன் கதறும் நடிகர் அபிநய்…