in

சிக்கியது குஷ்பூவின் போலி ஐடி! சைபர் கிரைமில் அதிரடிப் புகார்! நூதன மோசடி! ரசிகர்களுக்கு எச்சரிக்கை


Watch – YouTube Click

90-ஸ் கிட்ஸ்களோட ஃபேவரிட் ஹீரோயின், ரசிகர்களால கோவில் கட்டப்பட்ட ஒரே நடிகை நம்ம குஷ்பூ. இப்போ அவங்க சினிமா, அரசியல், தயாரிப்புனு செம பிஸியா இருந்தாலும், அவ்வப்போது சில சர்ச்சைகள்லயும் சிக்கிடுறாங்க.

ஆனா இப்போ அவங்களுக்கு வந்திருக்கிறது ஒரு புது விதமான தலைவலி!குஷ்பூவோட பேரை வச்சு யாரோ சில ‘புள்ளிகோஸ்’ ஒரு போலி ஈமெயில் ஐடியை உருவாக்கியிருக்காங்க.

அந்த ஐடில இருந்து சில முக்கியமானவங்களுக்கு மெசேஜ் அனுப்பி, குஷ்பூ பேசுற மாதிரியே நம்ப வச்சு ஏதோ தில்லுமுல்லு பண்ணப் பார்த்திருக்காங்க. விஷயம் குஷ்பூ காதுக்கு போகவும், மனுஷி சும்மா இல்லாம அந்த ஈமெயில் ஸ்க்ரீன்ஷாட்டுகளை அப்படியே சோசியல் மீடியாவுல தட்டிவிட்டு இருக்காங்க.

அந்தப் பதிவுல குஷ்பூ என்ன சொல்லிருக்காங்கன்னா, “என்னோட பேர்ல யாரோ போலி ஈமெயில் ஐடி கிரியேட் பண்ணி மெசேஜ் அனுப்புறாங்க. இது என்னோடது கிடையாது. நான் யார்கிட்டயாவது அப்பாயிண்ட்மெண்ட் கேட்கணும்னாலோ இல்ல பேசணும்னாலோ டைரக்டா போன் பண்ணி தான் பேசுவேன்.

இந்த மாதிரி ஈமெயில் அனுப்பி சந்திக்கணும்னு நான் கேட்க மாட்டேன்”னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க.இந்த டிஜிட்டல் காலத்துல பெரிய செலிபிரிட்டிகளோட பேர்ல பேக் அக்கவுண்ட் ஆரம்பிச்சு ஏமாத்துறது இப்போ அதிகமாயிடுச்சு. அதனால, “யாரும் இந்த மாதிரி மெசேஜ்களை நம்பாதீங்க, அந்த ஐடி-க்கு ரிப்ளை பண்ணாதீங்க”னு தன் ரசிகர்களுக்கும் சினிமா நண்பர்களுக்கும் வார்னிங் கொடுத்திருக்காங்க.

இது சம்பந்தமா போலீஸ்லயும் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. சினிமா, பி.ஜே.பி அரசியல்னு பிஸியா இருக்குற குஷ்பூவையே ஏமாத்தப் பார்த்த இந்த கும்பல் யாருன்னு இப்போ சைபர் கிரைம் போலீஸ் வலைவீசி தேடிட்டு வர்றாங்க!

What do you think?

சகோதரன் மகன் காது குத்து விழாவிற்கு 15 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்த அத்தை.

தேர்தல் நடத்தை விதிகள் அமல் – ‘C-VIGIL மூலம் புகார் வந்தால் 100 நிமிடங்களில் தீர்வு: கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி.