‘கன்னடத்து பைங்கிலி’ நடிகை சரோஜா தேவி என்று காலமானார்
இந்திய சினிமா அதன் புகழ்பெற்ற நபர்களில் ஒருவரான பி. சரோஜா தேவிக்கு பிரியாவிடை அளிக்கும் துக்கத்தில் மூழ்கியுள்ளது, அவர் 87 வயதில் காலமானார்.
மூத்த நடிகை சரோஜா தேவி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இன்று காலை 9 மணியளவில் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
அவர் வயது மூப்பு காரணமாக நோய்களால் அவதிப்பட்டு வந்தார். அபிநய சரஸ்வதி” மற்றும் “கன்னடத்து பைங்கிலி” என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுகு என்று 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகை, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றார்.
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தன் அம்மாவிற்கு கொடுத்த சத்தியத்தை மீறாத கொள்கை கொண்டவர் சரோஜா தேவி அம்மா.
தமிழில் சூர்யாவின் ஆதவன் படத்தில் கடைசியாக நடித்தார்.
இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்களையும் அஞ்சலியைதெரிவித்து வருகின்றனர்.


