நெய்வேலியில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கால்கோள் விழா…
கடலூர் மாவட்டம் நெய்வேலி வாசவி என்சினியரிங் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலயத்தில் 32-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கால் கோள் விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வரும் 27-ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், மற்றும் மஹா கணபதி பிரதிஷ்டை யும், 28-ஆம் தேதி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் ணெய்யபட்டு திருவிளக்கு பூசையும் நடைபெற இருக்கிறது.
மேலும் இதனை தொடர்ந்து 30-ஆம் தேதி எழில் ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரிகளும் நடைபெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக 31-ஆம் தேதி விநாயக பெருமானுக்கு 1008 கொழுகட்டைகள்யுடன் விசேஷ பூசைகள் செய்யபட்டு அன்னதானங்கள் வழங்கபடுகிறது.
அன்றி விநாயகர் வீதியுலா புறப்பாடும் நடைபெற இருக்கிறது.


