நிச்சயதார்த்தம் ஆகி இரண்டே மாதங்கள் ஆன நிலையில், லாரி மோதி தலை நசுங்கி வாலிபர் பலி.
சாலை விபத்தில் லாரி மோதியதில் தலை நசுங்கி வாலிபர் பலி. மயிலாடுதுறை போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை அபிராமி நகரில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவரது மகன் ஹரி பிரகாஷ். மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இரவு வேலையை முடித்துவிட்டு ஹரி பிரகாஷ் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, சீர்காழி செல்லும் சாலையில் பேருந்தின் பின்னால் சென்றுள்ளார்.

அப்போது எதிர்ப்புறம் இருந்து வந்த லாரி பேருந்தை கடந்து வந்த போது பின்னால் வந்த ஹரி பிரகாஷ் மீது மோதியது. இதில் தலை நசுங்கி ஹரி பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் ஹரி பிரசாத் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஹரி பிரசாத்திற்கு நிச்சயதார்த்தம் ஆகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


