கிட்னி மோசடி புகாரால் கதறிய ஜூலி! ”த.வெ.க நிர்வாகி தான் காரணம்!”
ஜல்லிக்கட்டு போராட்டத்துல ஃபேமஸாகி, பிக்பாஸ் மூலமா ஊருக்கே தெரிஞ்ச நம்ம ஜூலி, இப்போ மறுபடியும் ஒரு பெரிய சர்ச்சையில சிக்கியிருக்காங்க. அதுவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரோட ரசிகர்கள் கூடவே நேரடி மோதல்ல இறங்கியிருக்காங்க! என்னாச்சுன்னு விவரமா பார்ப்போம்.சமீபத்துல வேலூர்ல நடந்த த.வெ.க கூட்டத்துல விஜய் ஒரு ‘குட்டிக்கதை’ சொன்னாரு. அதைப் பத்தி ஜூலி ஒரு வீடியோ போட்டு விவாதிச்சிருந்தாங்க. “ஜல்லிக்கட்டு போராட்டத்தோட நிஜமான கஷ்டம் தெரியாம, சிலர் அரசியல் லாபத்துக்காகப் பேசுறாங்க”னு விஜய் பேச்சைக் கொஞ்சம் காட்டமாவே விமர்சிச்சாங்க..
இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவுல ஜூலியை லெப்ட் அண்ட் ரைட் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.விமர்சனம் பண்றது ஒரு பக்கம் இருந்தாலும்,
ஜூலிக்கு எதிரா சில பேரு ரொம்ப மோசமான வதந்தியைப் பரப்ப ஆரம்பிச்சிருக்காங்க. “ஜூலி கிட்னி விற்பனை மோசடியில சம்பந்தப்பட்டிருக்காங்க” அப்படின்னு ஆதாரமே இல்லாம சில வீடியோக்கள் வைரலாகியிருக்கு.
இதைப் பார்த்து அதிர்ச்சியான ஜூலி, “விஜய் பேசுன குட்டிக்கதையைப் பத்திப் பேசுனதுக்காக என் மேல இப்படிப் பொய்ப் புகார் சொல்றதா?”னு கொந்தளிச்சுப் போயிருக்காங்க.இந்த விவகாரத்துல சும்மா இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ண ஜூலி, இப்போ சென்னை கமிஷனர் ஆபீஸ்க்குப் போய் மாஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க.
“என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குற த.வெ.க நிர்வாகி உள்பட 8 பேர் மேல ஆக்ஷன் எடுக்கணும். அவங்க மேல பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துல வழக்குப் போடணும்”னு மனு கொடுத்திருக்காங்க.
ஒரு பக்கம் விஜய் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் டென்ஷன்ல இருக்க, இன்னொரு பக்கம் ஜூலிக்கும் அவரோட கட்சி நிர்வாகிகளுக்கும் இடையிலான இந்த ‘கிட்னி’ பஞ்சாயத்து இப்போ சோசியல் மீடியாவுல பயங்கர வைரல்!
