ஜெயம் ரவி..இக்கு வேண்டுகோள்…. பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆர்த்தி அம்மா
ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் அடங்கி இருந்த நிலையில் மீண்டும் தலை தூக்கியதற்கு காரணம் ஜெயம் ரவி கேனிஷா..வுடன் Ishari கணேஷ் மகளின் திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டது பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஜெயம் ரவியும் கேனிஷா தனக்கு சரியான துணை என்றும் அறிக்கை வெளியிட ஆர்த்தியும் இனி என்னை யாரும் ஜெயம் ரவி முன்னாள் மனைவி என்று கூறாதீர்கள் என்று பதில் போஸ்ட் போட்டுள்ளார்.
இவர்களின் பிரிவுக்கு காரணம் ஆர்த்தியின் அம்மா தான் என்ற குற்றச்சாட்டு முதன்முறையாக விளக்கம் தந்துள்ளார் ஆர்த்தியின் குடும்பமும் ஆர்த்தியும் தன்னை பணத்துக்காக மட்டுமே பயன்படுத்தியதாகவும் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு சல்லிக்காசு கூட தனக்காகவும் தன் பெற்றோர்களுக்காகவும் செலவு செய்ய விட்டது இல்லை எல்லாத்தையும் அவர்கள் கண்ட்ரோலில் வைத்திருந்தார்கள் என்று ஜெயம் ரவி கூறிய குற்றச்சாட்டிற்கு
கடந்த 20 ஆண்டுகளாக திரைதுறையில் தயாரிப்பாளராக இருந்து வருகிறேன் ஒரு பெண்ணாக இத்தனை காலம் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்கு தெரியும்.
இத்தனை ஆண்டுகளில் மீடியா முன்பு வந்ததில்லை இப்போது முதல் முறையாக என்னைப்பற்றி எழுந்துள்ள அவதூர்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிற்பந்தத்தில் இருக்கிறேன்.
கடந்த சில காலமாகவே கொடுமைக்காறி குடும்பத்தை பிரித்தவர். பணத்தை அபகரித்தவல் என்றெல்லாம் எனக்கு எதிராக விமர்சனங்கள் வருகிறது அதற்கு விளக்கம் தர விரும்புகிறேன் ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்தனை நாள் மௌனமாக இருந்து விட்டேன் எப்பொழுது நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னை பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகி விடும் அடங்க மறு, பூமி, சைரன் உள்ளிட்ட படங்களை ஜெயம் ரவியை வைத்து நான் எடுத்தேன் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு நான் கடன் வாங்கிய படத்தை எடுத்தேன் அதில் 25% ஜெயம் ரவிக்கு சம்பளமாக கொடுத்தேன் படம் நஷ்டத்தின் பல கோடி ரூபாய்க்கு நான் பொறுப்பேற்றின் அதில் ஒரு பைசா கூட ஜெயம் ரவி தலையில் நான் சுமத்தியது இல்லை ஜெயம் ரவி கோடிக்கணக்கில் அல்ல ஒரு பைசா ..வாவது கணக்கு காட்ட முடியுமா.
நான் அவரை மாப்பிள்ளை என்பதை தாண்டி சொந்த மகனாகவே கருதினேன் எந்த கஷ்டத்தையும் அவர் தலையில் நான் சுமத்தியது இல்லை நான் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே ஜெயம் ரவி அவர்களுக்கு வைக்கிறேன் என் கண்முன்னே என் பெண் கணவரை இழந்து தவிக்கும் நிலையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை இருவரும் இணைந்து திரும்பவும் வாழ வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்று கூறியுள்ளார்.