in

‘ஜனநாயகன்’.. ரிலீஸ் அதிரடித் தகவல்.! தளபதி தரிசனம்! ரிலீஸ் தேதி கன்பார்ம்?


Watch – YouTube Click

‘ஜனநாயகன்’.. ரிலீஸ் அதிரடித் தகவல்.! தளபதி தரிசனம்! ரிலீஸ் தேதி கன்பார்ம்?

 

தமிழ் சினிமாவோட பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி விஜய், தன்னோட 69-வது படமான ‘ஜனநாயகன்’ (Jananayagan) படத்தோட சூட்டிங்கை முடிச்சுட்டு இப்போ அரசியல்ல பிஸியா இருக்காரு.

2026 பொங்கலுக்கு வர வேண்டிய இந்தப் படம், எதிர்பாராத சென்சார் பிரச்சனையால அப்படியே நின்னுடுச்சு.

ஜனவரி, பிப்ரவரினு போயிட்டு இருந்த ரிலீஸ் தேதி இப்போ மார்ச் வரைக்கும் வந்துடுச்சு. படத்துல இருக்குற சில விஷயங்களால சென்சார் போர்டு ‘ஓகே’ சொல்ல தாமதம் பண்ணிட்டு இருந்தாங்க.

இப்போ வந்திருக்கிற லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னா… மார்ச் 17-ம் தேதிக்குள்ள ‘ரிவைசிங் கமிட்டி’ (Revising Committee) படத்தை முழுசா பார்த்துட்டு சென்சார் சர்டிபிகேட்டை கொடுத்துடுவாங்கனு படக்குழு நம்பிக்கையா இருக்காங்க.

சென்சார் கிடைச்சாலும் உடனே படத்தை ரிலீஸ் பண்ணப் போறது இல்லையாம். தமிழக தேர்தல் பரபரப்பு எல்லாம் முடிஞ்சு, ஓட்டுப்பதிவு முடிஞ்ச ஒரு வாரம் கழிச்சு தான் ‘ஜனநாயகன்’ தியேட்டருக்கு வரும்னு சொல்றாங்க.

அதாவது மே (May) மாசம் தான் தளபதி தரிசனம் இருக்கும்னு தெரியுது!பொங்கலுக்கு மிஸ் ஆனாலும், தேர்தல் முடிஞ்சு வர்றது ஒரு வகையில நல்லது தான்னு ரசிகர்கள் நினைக்கிறாங்க.

‘ஜனநாயகன்’ படத்துல இருக்குற அதிரடியான அரசியல் வசனங்கள் தேர்தல் நேரத்துல இன்னும் பெரிய ஹைப்பைக் கொடுக்கும்னு எதிர்பார்க்கப்படுது.

தளபதியோட கடைசிப் படத்தை தியேட்டர்ல பார்க்க ரசிகர்கள் இப்போவே டிக்கெட்டுக்கு வெயிட்டிங்!


Watch – YouTube Click Shorts

What do you think?

த்ரிஷாவுடன் கெத்தாக வந்திறங்கிய விஜய் – ‘ஷாக்’ கொடுத்த தளபதி! பற்றி எரியும் இணையம்!