‘ஜனநாயகன்’ 2nd single பாட்டு அதிரடி அரசியல் வாடை வீசும் காட்சிகள்
தளபதி விஜய் அரசியலுக்கு வர்றதுனால, அவரோட கடைசி படமான ‘ஜனநாயகன்’ மேல இப்போவே எதிர்பார்ப்பு எகிறிக்கிட்டு இருக்கு.
எச். வினோத் இயக்கத்துல வர்ற இந்தப் படம், வர்ற 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போகுது.
ஏற்கனவே படத்தோட ‘ஃபர்ஸ்ட் லுக்’ மற்றும் ‘தளபதி கச்சேரி’ பாட்டு வெளியாகி செம ஹிட்டான நிலையில, நேத்து இந்தப் படத்தோட ரெண்டாவது பாட்டு வெளியாச்சு.
“ஒரு பேரே வரலாறு…”சாதனை: பாட்டு ரிலீஸான ஒரே ஒரு மணி நேரத்துல 13 லட்சத்துக்கும் மேல பேர் இதைப் பார்த்து மிரள வச்சிருக்காங்க.
இந்தப் பாட்டு முழுக்க முழுக்க விஜய்யோட நிஜ அரசியல் பயணத்தை ஞாபகப்படுத்துற மாதிரி இருக்கு, விஜய் நிஜ வாழ்க்கையில பிரச்சார வாகனத்துல (Campaign Van) ஏறி நின்னு மக்களைப் பார்க்குறது, அவரோட செல்ஃபி எடுக்குறதுன்னு சமீபகாலமா நடந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளைத் தொகுப்பா இந்தப் பாட்டுல சேர்த்திருக்காங்க.
பாட்டோட வரிகளும் பயங்கரமா அரசியல் வாடை வீசுறதுனால, விஜய் ரசிகர்கள் இதைக் கொண்டாடித் தீர்க்குறாங்க. விஜய் நடிக்குற கடைசிப் படம் அப்படிங்கிறதால, இந்தப் பாட்டு இப்போ சோஷியல் மீடியாவுல காட்டுத்தீயா பரவிக்கிட்டு இருக்கு!


