சென்சார் சர்டிபிகேட் வாங்க வெறும் 18 வேலை நாட்கள் தான்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இப்போ ஒரு அதிரடி முடிவை எடுத்துருக்கு. முன்னாடி எல்லாம் ஒரு படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்க 48 நாள் வரைக்கும் வெயிட் பண்ணனும்.
ஆனா இப்போ அந்த நிலைமை அப்படியே மாறிடுச்சு! முன்னாடி 48 வேலை நாட்கள் ஆன சர்டிபிகேஷன் வேலை, இப்போ ஆன்லைன் சிஸ்டம் மூலமா வெறும் 18 வேலை நாட்கள்லயே முடிஞ்சுடும்.
நீங்க ஒரு குறும்படம் எடுத்து சர்டிபிகேட் கேட்டீங்கன்னா, வெறும் 3 நாள்ல உங்க கைக்கு சர்டிபிகேட் வந்துடும்!
எல்லாம் இப்போ டிஜிட்டல் மயம்! ‘e-cinepramaan’ அப்படிங்கிற போர்ட்டல் மூலமா ஆன்லைன்ல அப்ளை பண்றதுனால இந்த வேகம் சாத்தியமாகிருக்கு. இதனால படம் ரிலீஸ் ஆகுறதுல இருக்குற தேவையில்லாத தாமதம் இப்போ குறையும்.
செலவு குறையும்: படம் ரிலீஸ் தள்ளிப் போயிட்டே இருந்தா தயாரிப்பாளர்களுக்கு வட்டி அதிகமாகும். இப்போ சீக்கிரம் சர்டிபிகேட் கிடைக்கிறதுனால பணத்தை மிச்சப்படுத்தலாம்.
வயது அடிப்படையிலான சான்றிதழ்: புதிய விதிகளின்படி வயசுக்கு ஏத்த மாதிரி சர்டிபிகேட் (U, U/A 7+, U/A 13+, U/A 16+, A) கொடுக்கிறதை இன்னும் ஸ்ட்ரிக்ட் ஆக்கியிருக்காங்க.
என்னதான் சீக்கிரம் சர்டிபிகேட் கொடுத்தாலும், படத்தோட தரத்துலயோ இல்ல தணிக்கை முறையிலயோ எந்த சமரசமும் பண்ண மாட்டாங்கன்னு சொல்லிருக்காங்க.
கடந்த 5 வருஷத்துல மட்டும் CBFC சுமார் 70,000 படங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கு. இப்போ கொண்டு வந்திருக்க ‘சினிமாட்டோகிராஃப் திருத்தச் சட்டம் 2023’ தான் இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணம்னு மத்திய அமைச்சர் எல்.முருகன் சொல்லிருக்காரு.
சர்டிபிகேட் சீக்கிரம் வர்றதுனால நிறைய படங்கள் இனி வரிசையா தியேட்டருக்கு வரும்னு எதிர்பார்க்கலாம்.


