in

திரை துறையை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது விருப்பம்

திரை துறையை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது விருப்பம்

நடிகர் அஜித் குமாரை கௌரவிக்கும் விதமாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று விருது பெற்ற உடன் நடிகர் அஜித்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு எனக்கு அரசியல் தொடர்பான லட்சியங்கள் எதுவும் கிடையாது, திரை துறையை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஜனநாயகத்தில் உள்ள சிறப்பான விஷயம் என்னவென்றால் மக்கள் தங்களுக்கான தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுக்கிறார்கள் திரைத்துறையினர் மட்டுமல்ல அரசியலில் உள்ள யாராவது தலைவராக வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் அவர்களை நான் மனதார வாழ்த்துவேன் மக்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்கிறார்கள்.

யாரும் மோசமான படத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை வெற்றிக்கான பார்முலாவை தெரிந்து விட்டால் நிச்சயம் வெற்றி படங்களை இயக்குவார்கள் அதே போன்று தான் அரசியலும் வெளியிலிருந்து விமர்சனம் செய்வது ஈஸி ஆனால் களத்தில் இருப்பவர்களுக்கு தான் அதனுடைய கஷ்டம் தெரியும்.

பல கோடி மக்கள் இருக்கும் இந்த நாட்டில் எல்லா மக்களையும் திருப்தி படுத்துவது என்பது கஷ்டம் நான் ஜனாதிபதி மாளிகையில் இருந்த போது எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்துகிறார்கள் என்பதை பார்த்தேன்.

தினம்தோறும் அரசியல்வாதிகள் இதனை கடந்து வருவது மிகவும் கடினம் அரசியல் சம்பந்தமான தனிப்பட்ட கருத்துக்களை நான் எப்பொழுதும் சொல்வதில்லை.

ஒரு மாநிலத்தையோ ஒரு நாட்டையோ தங்கள் தோல்கலில் சுமப்பது மிகப்பெரிய சுமை ஒரு சிலர் சரியான காரணத்திற்காகவும் தவறான காரணத்துக்காகவும் அரசியலில் இருக்கிறார்கள். அரசியலுக்கு வருவது என்பது நூறு சதவீதம் துணிச்சலான முடிவு என்று கூறியுள்ளார் அஜித்குமார்.

What do you think?

சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரம்

சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயற்சியா?