மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் ஹாரூன் ரஷீத் அறிமுக கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் ஹாரூன் ரஷீத் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும் சீர்காழி தனித் தொகுதி வேட்பாளருமான கோபிநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக வேட்பாளர் ஹாரூன் ரஷீத் அறிமுகப்படுத்தி நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்கள் அனைவரும் வேட்பாளர் ஹாரூன் ரஷீத் வெற்றி பெற செய்ய வாக்கு சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஏற்புரை வழங்கிய தவெக வேட்பாளர் ஹாரூன் ரஷீத் பேசுகையில் தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்க செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் தவெக கட்சியில் அதிகமான இளைஞர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு ஓட்டு உரிமை இல்லை என்றும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போது நான் கையில் வைத்துள்ள புத்தகத்தில் 20,000 ஆயிரம் பேர் உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களே களப்பணியாளர்களாக உள்ளனர் இவர்களிடம் நான் தொலைபேசியில் பேசி வாக்கு சேகரிப்பதற்குள் தேர்தல் வந்துவிடும் என்றார் தொடர்ந்து பேசிய அவர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தமிழகத்தில் விஜய் முதலமைச்சராகுவதற்கு அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் தவெக தேர்தல் அறிக்கையை வீடு வீடாக சென்று வழங்கி வாக்கு சேகரித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.இந்நிகழ்ச்சியில் தவெக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


